5 ஆயிரம் ரூபா வழங்கலை மீள ஆரம்பிக்கும் கிராம உத்தியோகத்தர்கள்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கும் பணியினை மீள முன்னெடுக்கவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
அத்தியாவசிய சேவைகளை கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஸவுக்கும் கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று (17)  இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
முன்னதாக குறித்த பணியிலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகுவதாக நேற்றைய தினம் அறி;வித்திருந்தனர்.
 
அதேநேரம், சுற்றுநிருபத்தில் காணப்படும் குறைப்பாடுகளை முன்னிலைப்படுத்தி கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்கள் நேற்று முதல் பணிப்புறக்கணிப்பிலும் ஈடுப்பட்டிருந்தனர்.
 
இந்த நிலையில், இன்றைய தினம் பசில் ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
அத்துடன் நாளைய தினம் முதல் மீண்டும் தமது பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலம் – சூரியன் எப் எம்  செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435