ஊரடங்கு உத்தரவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்தாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 24 ஆம் வரை, நாளாந்தம் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமுலாகும்.
அந்த மாவட்டங்களில் 24 ஆ திகதி இரவு 8 மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு சட்டம் 27 ஆம் திகதி காலை 5 மணி வரை தொடரும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு உள்நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.