27 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுமா? தீவிர ஆலோசனை

நாடுமுழுவதும், இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் அமுலாகின்ற நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை பேச்சாளரான, காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரஙட்கு சட்டத்தை தளர்த்துவதாக கடந்த 20 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

எனினும், நாட்டின் தற்போதைய சுகாதார நிலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

அதில் முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு அமைய, ஊரடங்கு சட்டத்தை மீள அமுலாக்குவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த தீர்மானத்திற்கு அமைய, நாட்டின் தற்போதைய நிலை மற்றும் இன்றைய தினம் ஏதேனும் மாற்றங்கள ஏற்படுமாயின் அது குறித்து கவனம் செலுத்தி, இன்று அல்லது நாளைய தினம் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சூரியன் எப். எம் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435