மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பாதிக்கப்பட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆலோசனைக்கமைய, டுபாய் மற்றும் வடக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு இவ்வுலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையினால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோதமாக அந்நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை அந்நாடுகளுக்கான இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி பிரிவினால் வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், சார்ஜா, ரோயல் காயிமா, அஜ்மான் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இவ்வுலர் உணவுகள் வழங்கப்பட்டன.