எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் தவிரந்த ஏனைய மாவட்டங்களில், ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் அமுல்படுத்தப்படுகிறது.
அந்த மாவட்டங்களில் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 11ஆம் திகதிவரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.