கொவிட் 19 தொற்று உள்ள நிலையில் சிகையலங்கரிப்பு நிலையங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார வலியுறுத்தல்கள் குறித்த வட மாகாண சுகாதார திணைக்களம் வௌியிட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள் வருமாறு:
1. சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒருமீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.
2. முடிதிருத்துநர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
3. முடிதிருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குரிய சேவையினை நிறைவு செய்தபின் கைகளை
சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரமிட்டு கழுவிய பின்பே அடுத்த
வாடிக்கையாளருக்குரிய சேவையை வழங்க வேண்டும்.
4. மொத்தமாக பணியில் உள்ள முடிதிருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை
உள்ளே அனுமதிக்கவும். உதாரணமாக முடிதிருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால்
முடிவெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என நான்கு
வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும். கடையின் அளவு சிறிதாயின்
காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள்.
5. ஒவ்வொருவாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் ஸ்பிறிற் மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி தொற்றுநீக்கம் செய்யவும். தொற்றுநீக்கம் செய்யமுடியாதஉபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரைதவிர்த்துக் கொள்ளுங்கள்.
6. போர்வை,துவாய் மற்றும் பிளேட் போன்றவற்றைவழமைபோல் ஒருவருக்குஒன்றுஎனப் பாவிக்கவும். பிளேட்டைஒருவருக்குப் பாவித்தபின் அதனைஉரியமுறையில் கழிவகற்றல் செய்யவும்;. துவாய்கள் மற்றும் போர்வைகளைதோய்த்துஉலர்ந்தபின்பேபாவிக்கவும்.