கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 249 தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் தமீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர வர்த்தக வலயங்கள் 14கில் உள்ள 285 தொழிற்சாலைகளில் 249 தொழிற்சாலைகள் தற்போது உற்பத்திகளை ஆரம்பித்துள்ளன. சுதந்திர வர்த்தக வலயங்களில் சுமார் 142, 190 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 58, 742 பேர் தற்போது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலைகள் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய உற்பத்தி பணிகளை ஆரம்பித்துள்ளன. சுதந்திர வர்த்தக வலயத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை கட்டுநாயக்கவில் உள்ளது. 80 தொழிற்சாலைகளில் சுமார் 36,650 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இதேவேளை, சரக்கு விமான போக்குவரத்துக்காக இம்மாதம் 15ம்திகதி தொடக்கம் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை திறக்குமாறு அமைச்சர் விமானநிலைய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – சிலோன் டுடே/ வேலைத்தளம்