கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளபேதிலும், இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன பணிகளை வழமைக்கு கொண்டுவருதல் முன்னர் திட்டமிட்டவாறு இன்று (11) முதல் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (10) வெளியிட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்ததப்பட்ட ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ளது.
குறித்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை நாளந்தம் இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.