அரச அதிகாரிகள் சம்பள குறைப்பு – அதிருப்தி வௌியிட்ட முகாமைத்துவ உதவி அதிகாரிகள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசகர் பி.பி ஜயசுந்தர கோரியுள்ளமைக்கு அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கம் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.

குறைந்தளவு சம்பளத்திற்கு அதிக வேலைச்சுமையை கொண்டுள்ள குழுவாக அரச முகாமைத்து அதிகாரிகள் உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம் அந்த சம்பளத்தை கொண்டு ஒரு மாத வீட்டுச் செலவை முன்னெடுப்பதே சிரமமான விடயம் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 08ம் திகதிக்கு பிறகு இதுவரை எமக்கு எந்தவித வருமானமும் கிடையாது, அரச ஊழியர்களாக நாம் இருப்பதே அதற்கு காரணமாகும். கடந்த காலங்களில் வட்டியின்றி வழங்கப்படும் பண்டிக்கால கடனும் இம்முறை வழங்கப்படவில்லை. இதனால் அரச ஊழியர்கள் மேலும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான ஒரு சூழலில் அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பலவந்தமாக குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியானது அரச ஊழியர்களை மென்மேலும் அழுத்தங்களுக்குட்படுத்தும் செயற்பாடாகும். அது மட்டுமன்றி அது சட்டவிரோமான செயலாகும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அரசின் இச்செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அச்சங்கத்தின் தலைவர் சந்திம விமலசுரேந்திரவின் கையெழுத்துடனான கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி செயலாளர் தனது தனிப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி செயலக கடித தலைப்பை பயன்படுத்தியிருக்கின்றமை மற்றும் அதன் பிரதியை நீதியரசர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதனூடாக ஒரு வகையில் நிறுவன பிரதானிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதுடன் மறுமக்கம் இக்கோரிக்கை சட்டரீதியானது என்ற பிம்பத்தை தோற்றுவிக்கும் வகையிலும் செயற்பட்டுள்ளமையானது வருந்தத்தக்க விடயமாகும். மேலும் தமது அதிகாரத்தை வெட்கமின்றி தவறாக பயன்படுத்தியுள்ளார் எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் பல நிறுவன பிரதானிகள் குறித்த கடிதத்தை காரணம் காட்டி பலவந்தமாக எமது சேவையில் உள்ள அதிகாரிகளுடைய சம்பளத்தை குறைத்துள்ளனர் என நாடு முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவி அதிகாரிகள் எமது சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சப்ரகமுவ மாகாணசபை, கிழக்கு மாகாணசபை, கமத்தொழில் திணைக்களம், உள்நாட்டவருமான திணைக்களம் போன்ற நிறுவனங்கள் இவ்வாறு பலவந்தமாக சம்பளத்தை குறைத்துள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள குறைப்பானது சட்டவிரோதமான செயலுக்கு முயற்சிக்கும் அரசாங்கம் அமைச்சரவை அந்தஸ்தற்ற இராஜாங்க அமைச்சர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சலுகை பொதியொன்றை வழங்கி மில்லியன் கணக்கான நிதி வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வௌியாகியுள்ளது. இவ்வாறான சுகாதார அவசர காலநிலைக்கு நாடு எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மேற்கொண்டு செயற்பாடு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435