சீசெல்ஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்ப பதிவு செய்திருந்த இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் விதிமுறைகள், தனிமைப்படுத்தல் வசதிகளுக்கேற்ப அவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர். தொழில் இழப்பு, தொழில் ஒப்பந்தம் நிறைவடைந்தமை மற்றும் அவசர சிகிச்சை கோரிக்கை ஆகிய காரணங்களுக்காக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று விமான டிக்கட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ள இவ்விலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இவர்கள் அந்நாட்டின் ஐந்து தீவுகளில் சிதறியுள்ளனர். அதற்கமைய அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரலாயுத்துடனும் அந்நாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் சங்கம் என்பவற்றுடன் தொடர்ந்து தொடர்புகளை பேணி வரும் குறித்த இலங்கையர்கள் குறித்து தற்போது ஆராயப்படுகிறது.
தற்போது அனுசரனை தேவைப்பட்டுள்ள அந்நாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தேவையான சலுகைகளை இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் கீழ், இலங்கையர்களின் சங்கம், சீசெல்ஸ் பௌத்த சங்கம் மற்றும் லக்ஷ்டர் கிரிக்கட் குழு ஆகியன ஒன்றிணைந்த குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அவ்விலங்கையர்களின் கோரிக்கைக்கமைய உணவுப் பொருட்களை பகிர்ந்தளித்துள்ளது. அத்துடன் தூதுவர் குழுவுடன் 24 மணி நேரமும் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி வசதிகளையும் உயர்ஸ்தாரிகராலயம் வழங்கியுள்ளது என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.