தொழில் மற்றும் மாதாந்த சம்பளம் தொடர்பில் ஸ்மார் ஷர்ட் நிறுவன தொழிலாளர்கள் நிறுவன நிர்வாகத்துடன் நேற்றுமுன்தினம் (03) நடத்தப்பட்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
ஸ்மார் ஷர்ட் நிறுவனத்திற்கு கீழியங்கும் ஐந்து நிறவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து பேர் கொண்ட குழுவுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தற்போது பணியில் இருப்போர், பணியில் ஈடுபடாதவர்களுக்கும் ஒரே அளவு சம்பளம் வழங்க முடியாது. குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடி தெரிவிப்பதாகவும் நிர்வாகக்குழு ஊழியர் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளது.
எப்போது தொழில் ஆரம்பமாகும் என்று உறுதியான தினம் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ள நிர்வாகக்குழு, மாதாந்தம் குறுந்தகவல் ஊடாக நிகழ்கால நிலைமை குறித்து அறியத்தருவதாகவும் தெரிவித்துள்ள நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
தமது தொழில் தொடர்பில் உறுதியான முடிவு கிடைக்காத நிலையில் தொழிற்சாலை பிரதான வாயிலில் அமர்ந்திருந்த ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில், தங்கியிருக்கும் இடங்களில் வீட்டு வாடகை மிகுதியை கேட்டு வீட்டு உரிமையாளர்கள் தொந்தரவு செய்கின்றனர். அதனால் தங்குமிடங்களுக்கு செல்ல முடியாதுள்ளது. எம்மை நம்பி வாழும் குடும்பத்தனிர் கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடு்கின்றனர். அதனால் வீடுகளுக்கும் செல்ல முடியாதுள்ளது என்றும் தெரிவித்தனர்.
கொவிட் 19 பிரச்சினை காரணமாக உற்பத்தி தனியார் துறை ஊழியர்கள் அனைவருடைய தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது என்றும் தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்காலிகமாக தொழில் இழந்தவர்களுக்கு 14, 000 கொடுப்பனவு வழங்குவது என்றும் அண்மையில் தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.