கடந்த ஒரு வார காலப்பகுதியில் தென் கொரியாவில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவின் மேற்குப் பகுதியில், இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டளவில் தென்கொரியாவுக்கு சென்றுள்ள குறித்த இலங்கையில், நீண்டகாலமாக வீசா இன்றி அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேநேரம், தென்கொரியாவின் கிங்தோம் பகுதியில் இலங்கையர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கு காரணமாக அமைந்ததாக தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் போகான் பிரதேசத்திலுள்ள கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் இருந்து கீழே வீழ்ந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் கீழே வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் : Sooriyanfmnews.lk