மேலதிக நேர கொடுப்பனவு மற்றும், சனிக்கிழமைகளில் தபாலகங்களை தற்காலிகமாக மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன , நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரசசினையை முன்வைத்து தபால்துறை பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துவருகின்றனர்.
தபால்துறை பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை தவிர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.