சுற்றுலாப்பயணிகள் வருகைக்கு தயாராகும் இலங்கை

ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத் தரும் அனைவருக்கும் பி.சி. ஆர் பரிசோதனை செய்வதற்கான வழிமுறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜி.எ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

நேற்று (17) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, ஓகஸ்ட் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு வருகைத் தரும் அனைவருக்கும் 3 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டினுல் புதிய கொவிட் 19 தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமானநிலைய மீள்திறப்பு, மற்றும் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருதல் தொடர்பான எதிர்கால திட்டம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் நோக்கில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435