வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களை பதிவு செய்யும் இரண்டாம் கட்டப் பணிகள் நேற்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
போலந்து, ஹொங்கொங், ரூமேனியா, செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கான பதிவுகள் நேற்று முதல் இடம்பெறுவதாக பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துளளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டு, தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய நிலையில், மீண்டும் தொழிலுக்கு செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தப் பதிவின்போது முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
எவ்வாறிருப்பினும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய நாடுகளுக்காக பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.