கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை உருவாக்க கொள்முதல் செய்யப்பட்ட மூன்று கிரேன்களை பொருத்துமாறு கோரிய போதிலும் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்று சுதந்திர துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவகே தெரிவித்துள்ளார்.
துறைமுக அதிகாரசபையிடம் கோரிக்கை முன்வைத்து ஐந்து நாட்களாகின்றன. எனினும் பொருத்துவதற்கான எந்த நவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. தொடர்ந்து கடந்த ஜூன் 20ம் திகதி கிரேன்கள் கொள்வனவு செய்யப்பட்டன. எனினும் பொருத்தும் நடவடிக்கைகள் தாமதாகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வாக்குறுதியளித்தபடி இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கையெடுக்குமாறு மற்றொரு தொழிற்சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.