வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (17) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் அரச மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் நேற்று (16) மாலை மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியை, தனியார் பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் பஸ் உரிமையாளர் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமது ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா புதிய பஸ் நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் தமக்கு பாதுகாப்பில்லை, தூர சேவை பஸ்கள் புதிய பஸ் நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி கோரியும், நேற்றைய தினம் தனியார் பஸ்சங்க ஊழியர், உரிமையாளரினால் இ.போ.ச நடத்துனர் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச,தனியார் ஊழியர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435