நாளை கடமைகளை ஆரம்பிக்கவுள்ள ஆசிரியர்களுக்கு

நாளை 29.06.2020 பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளது.

பாடசாலையின் முதல்வாரம் கொரோனா ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக – மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகளை – பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் கலந்துரையாடி – பாடசாலைகள் மட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதற்கான வாரமாகும்.

கல்வியமைச்சின் சற்றுநிருபமான –
ED/01/12/06/05/01 இலக்க 22.06.2020 சுற்றுநிருபம் இதனை வெளிப்படுத்துகிறது.
இதனைத் திட்டமிடுவதற்கு முன்,
சுற்றுநிருபத்தை அதிபர் ஆசிரியர்கள் வாசித்துள்ளார்களா? என்பதே எனது சந்தேகம்.

பலர் தொலைபேசிவாயிலாக – 7.30 முதல் 3.30 மணிவரை நிற்கவேண்டுமா?
வெளிமாவட்டங்களில் பணியாற்றும் நாம் எவ்வாறு திரும்புவது? போன்ற சந்தேகங்களைத் தொடுக்கின்றனர்.

அதற்கான விளக்கும் பதிவே இதுவாகும்.
1 பாடவேளை 1 மணிநேரமாக திட்டமிடப்படும்.

இச் சுற்று நிருபத்தின் 02 வது பிரிவில் விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த பாட ஆசிரியர் தனது பாடவேளை ஆரம்பமாவதற்கு முன் 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
உதாரணமாக -ஒரு ஆசிரியருக்கு 11.00 மணிக்கே முதற்பாடம் ஆரம்பமாகுமாயின் –
10.30 மணிக்கு சென்றால் போதுமானது.
அவர் காலை 7.30 மணிக்கே செல்லவேண்டும் என்ற அவசியமில்லை.

அத்துடன் – பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்படவேண்டும்.
வாரத்தில் 1நாள் ஒரு ஆசிரியர் 3.30 மணிவரை நிற்கக்கூடியவாறே நேரசூசி தயாரிக்கலாம்.
இதனை அடிப்படையாகக் கொண்டு 3.30மணிவரை நிற்க வேண்டிய ஆசிரியருக்கு – அன்றைய தினம் முதல் பாடவேளையை பிந்திய நேரமொன்றுக்கு வழங்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் திட்டமிடலாம்.

இந்தத் திட்டமிடலுக்காகவே – முதல்வாரம் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் தரப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் கலந்துரையாடி ஆரோக்கியமாக நேரசூசி தயாரித்து கற்பித்தலைத் திட்டமிடவேண்டும்.
பாடசாலை மட்டங்களில் இத்தகைய விடயங்களைத் திட்டமிடலாம் என சுற்றுநிருபம் கூறுகிறது.
இந்த திட்டமிடலில் எல்லா பாடசாலைகளுக்கும் பொதுவான பொதுக்கட்டமைப்பு உருவாக்கத்தேவையில்லை. ஆசிரிய ஆளணியைப் பொறுத்து தனித்தனியாக திட்டமிடலாம்.

இந்த நடைமுறைகளுக்காகவே- தனியான ஆவணமொன்றில் கையொப்பமிட இந்தச் சுற்றுநிருபம் கூறுகிறது.
லீவு எடுப்பதாக இருந்தால் – குறித்த ஆசிரியரின் பாடவேளைக்கு பதிலீட்டு ஆசிரியரை வழங்கி லீவு எடுக்கவும் இந்த சுற்றுநிருபம் அனுமதிக்கிறது.

ஆ.தீபன் திலீசன்,
உபதலைவர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.

 

நன்றி- இலங்கை ஆசிரியர் சங்கம்- கொழும்பு

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435