
சவூதி அரேபியாவில் காலாவதியான பணி விசாவை 3 மாதங்களுக்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முடக்க நிலை காரணமாக ஏற்கனவே சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சவூதியை விட்டு இலங்கையர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் வெளியறே முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் விசாக்கள் காலாவதியான நிலையில் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் அங்கேயே உள்ளனர்.
இந்நிலையில் சவூதியில் வெளிநாட்டினரின் பணி விசா மற்றும் சுற்றுலா விசா ஆகியவை செல்லுபடியாகும் கால அளவை மேலும் 3 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் சவூதி வதிவிடத்தை பெற்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்று முடியும் வரை நாட்டிற்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி கடவுச்சீட்டு இயக்குனரகம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – தினகரன்