குவைத் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு செல்ல குவைத் அமைச்சரவை இன்று சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அதன் படி ஜூலை மாதம் 28ம் தேதி முதல் குவைத் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான மூன்றாம் கட்டம் ஆரம்பம் ஆகின்றது.
குவைத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய பகுதி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுகிறது. ஜூலை 28ம் திகதி முதல் இரவு 9:00 மணி முதல் அதிகாலை 3:00 மணிவரை பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.
முழு நேர ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் ஃபர்வானியா பகுதியில் ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் முழு நேர ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
குவைத்தில் உள்ள மற்ற பகுதிகளைப் போன்று பகுதி நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
நன்றி : குவைத் தமிழ் முரசு