கொவிட்- 19 தொற்று கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பிரதிநிதிகள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தங்களது சட்ட சிக்கல் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறியதன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களின் உறுப்பினர்கள், கொவிட்-19 டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தடுப்பு செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் தற்போது இறுக்கமான சூழல் உருவாகியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டார்.