வாகன இறக்குமதி தடையால் 20,000 பேர் வரை வேலையிழக்கும் அபாயம்

அரசாங்கம் மேற்கொண்டுள்ள வாகன இறக்குமதி தடையானது ஆயிரக்கணக்கானவர்களின் தொழில் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (The Ceylon Motor Traders Association – CMTA) தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தடை எப்போது நீக்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் தௌிவாக வரையறுத்துக் கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள, இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் யசேந்திர அமரசிங்க, அரசாங்கத்தால் பரிசோதிக்கப்பட்ட முறையான இறக்குமதியாளர்களுக்கு வாகன இறக்குமதியை ஒழுங்குபடுத்தி கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் கொவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் முன்முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். இருப்பினும், வாகன இறக்குமதி தடை ஆயிரக்கணக்கான இலங்கையர்களை மோசமாக பாதித்துள்ளது. வணிகங்கள் மற்றும் குடிமக்கள் முன்னரே திட்டமிடக்கூடிய வகையில் தடை எப்போது நீக்கப்படும் என்பது அரசாங்கம் தௌிவுபடுத்தவேண்டும்.

எமது சங்கமானது, நாட்டு மக்களுக்கு நேரடியாக, மறைமுகமாக வேலைவாய்ப்பினை வழங்கக்கூடிய, கணிசமான முதலீடுகளுடன், மோட்டார் கார்கள், வணிக வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், டயர்கள் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தும் சர்வதேச குறிகளை கொண்ட 20,000 இற்கும் மேற்பட்ட உரிமையாளர்களை அங்கத்தவர்களாக கொண்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் அனைத்து வாகன இறக்குமதியையும் முற்றுமுழுதாக தடை செய்துள்ளமையானது. முழுத் தொழிலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.​ைஇறக்குமதி குறித்த உறுதியான காலக்கெடுவை வழங்குமாறு அரசாங்கம் எமக்கு வழங்கவேண்டும். தடை நீக்கம் செய்ய பல மாதங்கள் ஏற்படுமாயின் தொழில்துறைக்கு ஆதரவை அரசாங்கம் வழங்கவேண்டும். இதனூடாக இறக்குமதியாளர்கள் தமது ஊழியர்களை தொடர்ந்தும் பணியில் தக்க வைத்துக்கொள்ள முடியும். இருப்பு இல்லை, வாகன விற்பனை வருமானம் இல்லை. இந்நிலையை கவனத்திற் கொண்டு “பரஸ்பர சாத்தியமான வழியை உருவாக்கும் முயற்சிகளுக்காக சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான உரையாடலை நடத்த நாங்கள் மிகவும் விரும்புகிறோம்,” என்றும் அமரசிங்க மேலும் கூறினார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435