அனைவருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

சமூகப்பரவல் நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பான தொழில்நுட்ப வரைவிலக்கணத்தை வழங்கும் இயலுமை தொற்றுநோய் விஞ்ஞான பகுதிக்கு மாத்திரமே உள்ளது. எனவே தொழில்நுட்ப விடயத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தாது கொரோனா நோயின் கட்டுப்பாட்டுக்குத் தேவையான உதவியை வழங்குமாறு சகல தரப்பினரிடமும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ளவும் கொரோனா தொற்றிய நபர்களின் உயிர்களை காப்பற்றவும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் யோசனைகளை வழங்கியுள்ளது.

ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையிலேயே இவ்வறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நோயாளர்களை தேடியறிவதை வினைத்திறனாக்குவதற்கும் அதனை வெற்றிகரமாக்கி கொள்வதற்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை 1000 வரையில் அதிகரிப்பதற்கு வழி ஏற்படுத்துதல், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் சவாலுக்குள்ளாகியிருப்பதால், தனிமைப்படுத்தல் நிறுவனங்களுக்குப் பதிலாக இல்லங்களில் தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெரும்பான்மையான நோயாளர்கள் நோய் குணங்குறிகளை காட்டுவதில்லை. அபாயம் குறைந்த நோய் குணங்குறிகளற்ற நோயாளர்களை மருத்துவமனை அல்லாத நிறுவனங்களிற்கும், சிறிதளவு நோய் குணங்குறிகளை வெளிகாட்டும், தொற்றா நோய்களால் பிடிக்கப்படாத நோயாளர்களை சிறு வைத்தியசாலைகளுக்கும் வயதானோர், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் மற்றும் உயிராபத்திற்குரிய நோய்க்குணங்குறிகளை கொண்டோரை மட்டும் பிரதான வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கான சுட்டிகளை வரையறுக்க வேண்டும்.

சகல பொது மக்கள் விஷங்கள், நச்சுக்கள் மற்றும் மாசுக்கள் அற்ற தேசிய பாரம்பரிய உணவு முறைக்கு பழகுதல், நன்கு நீர் அருந்துதல், இனிப்பு பானங்கள், புகைத்தல் மற்றும் மதுபானத்திலிருந்து முற்றாக நீங்கியிருத்தல், வீட்டில் உணவு சமைத்தல், வீட்டுத்தோட்டம் செய்தல் மற்றும் உடற்பயிற்சி என்பனவற்றை முன்னேற்றுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தல்.

கொரோனா நோய் பரவலின் காரணமாக நாடு முழுவதிலுமுள்ள மதுபான நிலையங்களை மூடுவதன் மூலமும் நோயெதிர்ப்பு சக்தியையும் பொதுமக்களின் அர்ப்பணிப்பையும் உறுதி செய்யலாம். கோரோனா நோயினை அரசியல் பிரசாரங்களுக்காகவோ அரசியல் இலாபத்திற்காகவோ பயன்படுத்த வேண்டாம் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெளிவான வேண்டுகோளாகும்.

கொரோனா நோயானது இன்னும் சமூகப் பரவல் நிலையை அடையவில்லை என தொற்றுநோய் விஞ்ஞான பகுதியால் கூறப்படுகின்றது. இதன்போது கொரோனா நோயின் பரவல் தொடர்பான தகவல்களை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஆரம்பத்திலிருந்தே பங்களிப்புச் செய்த குழுக்களுடன் தொற்றுநோய் விஞ்ஞான பகுதி பகிர்ந்து கொள்ளாமையினால் சமூகப்பரவல் நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பான தொழில்நுட்ப வரைவிலக்கணத்தை வழங்கும் இயலுமை தொற்றுநோய் விஞ்ஞான பகுதிக்கு மட்டுமே உள்ளது.

எனவே தொழில்நுட்ப விடயத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தாது கொரோனா நோயின் கட்டுப்பாட்டுக்குத் தேவையான உதவியை வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கோருவதோடு கொரோனா நோயின் பரவலை தடுப்பதற்கு பங்களிக்கும் குழுக்களிடம் நோயாளர்கள் மற்றும் தொடர்பாளர்களின் பரவல் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமையினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளிற்கு தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதியே பொறுப்பேற்க வேண்டுமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435