பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது
இதன் காரணமாக தாங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஹேமசிறி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் சுமார் 2 ஆயிரம் பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த காலங்களில் ஆயிரத்து 662 பதிவாளர்களே பணியாற்றினர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் முறையற்ற விதத்தில் மேலும் 200 பேருக்கு நியமனங்களை வழங்கினார்.
இதன் காரணமாக பதிவாளர்களுக்கான கொடுப்பனவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. இதனால். தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹேமசிறி ரணசிங்க தெரிவித்துள்ளார்.