
நாடு முழுவதிலும் உள்ள வெகுசன ஊடகவியலாளர்களின் தகவல் சேகரிப்புக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை தகவல் வழங்க தவறியவர்களிடமிருந்து தகவல் பெரும் நோக்கில் இக்கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே இதுவரை தகவல் வழங்காத ஊடகவியலாளர்கள் தமது தகவல்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் www.media.gov.lk என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை தரவேற்றம் செய்து அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றனர்