இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில்

இலங்கை பொதுப்போக்குவரத்துசபையின் தேசிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (12) வேலைநிறுத்தப்போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளனர்.

தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கொழும்பு, சிறிகொத்தா தலையகத்தின் முன்பாக இரு நாட்கள் போராட்டம் நடத்தி வந்த குறித்த சங்கப் பிரதிநிதிகள் தமது சாத்தியமான பதில் எதுவும் கிடைக்காமையினால் நேற்று இரவு தொடக்கம் கட்சித் தலைமையகத்தில் இருந்து வௌியேறி இன்று இரவு தொடகம் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக தேசிய ஊழியர் சங்க அங்கத்தவர் சிந்தக்க மனோஜ் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.

கடந்த 20 வருடங்களாக நாட்டில் சுதந்திரகட்சியின் ஆட்சியே காணப்பட்டமையினால் ஐதேகவுக்கு ஆதரவான தமக்கு எவ்வித பதவியுயர்வும் கிடைக்கவில்லை. இவ்வாண்டு ஜனவரி மாதம் அநீதியிழைக்கப்பட்ட இ.போ.ச ஊழியர்களுக்கு பதவியுயர்வு கிடைத்தாலும் 6 மாதங்கள் கடந்த நிலையில் பதவியுயர்வுகளுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூறுநாள் அரசின் கீழ், போக்குவரத்துத்துறை அமைச்சராக சுதந்திரகட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிமால் சிறிபால டி சில்வாவே நியமிக்கப்பட்டிருந்தமையினால் அக்காலப்பகுதியிலும் தமக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லையென்றும் இவ்வாண்டு கிடைத்த பதவியுயர்வும் இன்னமும் பயனற்றுள்ளதாகவும் சிந்தக்க மனோஜ் தெரிவித்தார்.

இதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கவனம் தம்மேல் திரும்பவேண்டும் என்பதற்காக கட்சி தலைமையகத்தின் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்ததாகவும் தமக்கு உரிய பதில் கிடைக்காமையினால் போராட்டத்தில் குதிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று எதிர்பு நடவடிக்கையை நிறைவு செய்த சந்தர்ப்பத்தில் நாடு பூராவுமிருந்து பல பஸ் டிப்போக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்த அனைவரும் போராட்டத்தை நடத்த விருப்பம் தெரிவித்ததுடன் தற்போது நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு நாடு தழுவிய போராட்டங்களை நடாத்தி பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்த தாம் விரும்பவில்லை என்றும் கிடைக்கும் பதிலுக்கமைய நிலைமையை ஆராய்ந்து ​நாடு தழுவிய போராட்டத்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறு இருப்பினும் கட்சிக்கு பொறுப்பானவர்களும் அமைச்சர்களும் எமது நியாயமான கோரிக்கை குறித்து தௌிவாகியுள்ளனர் என்றும் அதனால் மிக விரையில் தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சித் தலைமையத்தினுள்ளே எதிர்ப்பை தெரிவித்து அமர்ந்திருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் தமக்கு பிரச்சினைக்குட்படுத்தவில்லையென்றும் கட்சியினரின் நன்மை கருதி நியாயமான தீர்வை வழங்க வழங்குவார்கள் என தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பி.டப்ளியு. முதுகுடஆராய்ச்சி- வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435