2019ஆம் ஆண்டில் தொழிலின்மை சதவீதம் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி 2019ஆம் ஆண்டுக்காண ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழிலற்றோர் குடித்தொகையானது 2018ஆம் ஆண்டில் பதியப்பட்ட 0.373 மில்லியனுடன் ஒப்பிகையில் 2019ஆம் ஆண்டில் 0.411 மில்லியனதாக அதாவது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
தொழிலற்ற பெண்கள் 8.3 சதவீதத்தாலும் தொழிலற்ற ஆண்கள் 13 சதவீத்தாலும் அதிகரித்துள்ளனர். ஒட்டுமொத்த தொழிலின்மை வீதமானது 2018ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக காணப்பட்ட அதேவேளை, 2019இல் 4.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொழிலின்மை வீதமானது இரண்டு மடங்கு அதிகரிப்பை காட்டுகிறது.
ஐந்தில் ஒரு பங்கு இளைஞர்கள் நாட்டில் தொழில் இல்லாதுள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்புவதற்கு இளைஞர்கள் சரிமான வழியில் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
15-24 வயத்துக்குட்பட்ட இளைஞர்களின் தொழிலின்மை வீதமானது 21.5 சதவீதமாகவும் 25-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தொழிலின்மை வீதம் 11 சதவீதமாகவும் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நன்றி – நிஷாந்தன் சுப்ரமணியம்