5,000 ஐ கடந்தது இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று மாத்திரம் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் 194 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

அவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 114 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா  தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,591 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,038 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11 பேர் நேற்று குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றில் இருந்து குணமடைநடதவர்களின் மொத்த எண்ணிக்கை 3,328 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435