நாளை (18) தொடக்கம் அவசர பொது சேவைகளுக்காக தூதரகம் பாதியளவு திறந்திருக்கும் என்று குவைத்துக்கான இலங்கை தூதரகம் அதன் முகநூல் பக்கத்தில் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தூதரக சேவை நாடி வரும் பொது மக்கள் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்கூட்டியே நேரம் ஒதுக்கிய பின்னர் தூதரகத்திற்கு வருகைத் தருமாறு கோரப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கொன்சியுலர் சேவைகளுக்கு (பிறப்பு, இறப்பு, திருமண பதிவு, குடியுரிமை சான்றிதழ், வாகன ஓட்டுநர் உரிமம், மற்றும் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தல் சேவை) 65616863 என்ற எண்ணுடன் தொடர்புகொண்டு ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரை காலை 10.00 மணி தொடக்கம் முற்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் தமக்கான நேரத்தை ஒதுக்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியும்
புதிய கடவுச்சீட்டை பெற விண்ணப்பிக்க 65619836 என்ற எண்ணுடன் தொடர்புகொண்டு ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணி வரையான காலப்பகுதியில் நேரத்தை ஒதுக்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
வேலைவாய்ப்பு குறித்த முறைப்பாடுகளுக்கு 25354633 என்ற எண்ணுடன் தொடர்புகொண்டு ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை நேரத்தை ஒதுக்கி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூதரகத்திற்கு வர முதல் நேரம் ஒதுக்குவது கட்டாயமாகும். அவ்வாறு நேரம் ஒதுக்காமல் வருகைத் தருகிறவர்கள் தூதரகத்திற்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வருகைத்தந்து தமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொது மக்களிடம் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.