கூட்டு ஒப்பந்தத்தில் தாக்கம் செலுத்தும் கொவிட் 19

தோட்டத் தொழிலாளர் வேதன கூட்டு தற்போது நிலவுகின்ற கொவிட்19 பரவல் சூழ்நிலையால், பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் குறித்த கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தாக்கத்தை செலுத்தும் என்று, பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெருந்தோட்ட நிறுவனங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ரொசான் ராஜதுரை இதனை சூரியன் எப்எம் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கின்ற கூட்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகின்ற நிலையில், புதிய கூட்டு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட வேண்டும்.

எனினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையால் அதுகுறித்து இன்னும் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று ரொசான் ராஜதுரை தெரிவித்தார்.

அதேநேரம், தாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ள மார்க்கத்தின் ஊடாகவே பெருந்தோட்டத் தொழிலாளாகளுக்கு நாளாந்தம் 1000 ரூபாய் வேதனம் வழங்கப்பட முடியும் என்றும், அதற்கு மாற்றீடான வழிமுறைகள் எவையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தி திறன் அடிப்படையில் தொழிலாளர்களது வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கலாம்.

ஆனால் நாளுக்கு நான்கு மதியாலங்கள் வேலை செய்து, 1000 ரூபாய் நாளாந்த வேதனைத் வழங்குவது சாத்தியம் இல்லை.

அத்துடன் 1000 ரூபாய் வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று யாரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால், பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பெருந்தோட்டத் தொழிற்துறையை பாதுகாக்க வேண்டும். அதுதொடர்பில் தொழிற்சங்கங்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு சர்வதேச அளவில் இலங்கைத் தேயிலைக்கான விலை சிறிய அதிகரிப்பை காட்டினாலும், இந்த ஆண்டு நிலைமை மாறி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை உற்பத்தியில் ஏற்பட்ட குறைவின் காரணமாக தேயிலை தூள் தயாரிப்பு செலவினங்கள் அதிகரித்துள்ளன.

இதனால் நிறுவனங்களின் லாபத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம் : சூரியன் எவ்.எம் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435