நாட்டில் 27 கொரோனா தொற்று அபாயம் கூடிய பொது சுகாதார பரிசோதகர் பிரிவகைளை அமைச்சின் தொற்று நோய் பிரிவு அடையாளங்கண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 7 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தி்ல் 19 பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 2 பிரிவுகளும் உயர் தொற்று அபாயம் உள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகரசபை பிரதேசம், நுகேகொடை மற்றும் பத்தரமுல்ல, கொலன்னாவ, கஹதுடுவ, மொரட்டுவ மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்கள் உயர் தொற்று அபாயம் உள்ளவை என அடையாளங் காணப்பட்டுள்ளது.
ராகம, மினுவங்க, திவுலப்பிட்டிய, ஜாஎல, ஏக்கல, கட்டான, சீதுவ, சீதுவ, கம்பஹா, அத்தனகல்ல, வேயங்கொட, களனிய, மஹார, தொம்பே, பூகொட, மீரிகம, பியகம, நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்கள் கம்பஹாவிலும், மதுகம, வாத்துவ ஆயி பகுதிகள் களுத்துறை மாவட்டத்திலும் தொற்று அபாயம் உள்ள பிரதேசமாக அடையாளங்காணப்பட்டுள்ளது.