முறைப்பாடுகளை விரைவில் தீர்க்குமாறு அமைச்சர் உத்தரவு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை விரைவில் தீர்த்து வைக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள அவ்வமைச்சின் சமரச பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் 10505 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதியப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக விசாரணை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி விரைவில் தீர்வுகளை பெற்றுகொடுக்கமாறே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் 10505 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 11035 முறைப்பாடுகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2015ஆம் கிடைத்த முறைப்பாடுகளில் அதிகமானவை சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் வழங்கிய குறித்த முறைப்பாடுகளாகும்.

கடந்த 2015 ஆண்டு சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர்கள் பிரச்சினைகள் தொடர்பில் 3668 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதற்கு 2015 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளும் சேர்த்து 6148 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன. குவைத்தில் பணியாற்றுவோர் தொடர்பில் 1901 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 1831 தீர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் 963 முறைப்பாடுகளில் 932 முறைப்பாடுகளும் கட்டார் நாட்டின் 726 முறைப்பாடுகளில் 718 முறைப்பாடுகளும் பஹ்ரைனின் 366 முறைப்பாடுகளில் பழைய முறைப்பாடுகளும் சேர்த்து 467 முறைப்பாடுகளும் மலேசியாவின் 241 முறைப்பாடுகளில் 226 முறைப்பாடுகளும் ஓமானின் 218 முறைப்பாடுகளில் 210 முறைப்பாடுகளும் சிங்கப்பூரின் 88 முறைப்பாடுகளில் பழைய முறைப்பாடுகளையும் சேர்த்து 98 முறைப்பாடுகளும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

இதில் பிரச்சினையென்று கூறப்படுவது முறைப்பாட்டாளரின் தொழில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் உள்ள பிரச்சினைகளாகும். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் செய்யும் முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435