மேல் மாகாணம் முழுவதும் நாளை (29) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இத்தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் ஆங்காங்கே அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது நவம்பர் 2ம் திகதியின் பின்னரும் மீளறிவித்தல் வரை தொடரும் என்றும், மேல் மாகாணத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காலை 8.00 மணி தொடக்கம் 10.00 மணி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.