தொழில் திணைக்களத்திலும் கொரோனா

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் நுழைவாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்  4 பேருக்கும், தொழில் அமைச்சின் சாரதி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உணவகத்தினை நடத்தி சென்றவர் அண்மையில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றிருந்த நிலையில் அவரின் ஊடாக இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

உணவகத்தின் உரிமையாளர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போதும் அவருக்கு தொற்று ஏற்படவில்லை.

எனினும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது அவருக்கு குறித்த சாரதியால் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  அவர் மூலமாக குறித்த சாரதிக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேரும் குறித்த சாரதியுடன் தொடர்பை பேணியிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.

இதேவேளை, வெள்ளவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் தங்கியிருந்து இந்நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 70 வயதுடைய இந்திய பிரஜைக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்தியநிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435