
நிறுவையை ஒழுங்காக காட்டும் தராசை பயன்படுத்துமாறு கோரி ஹட்டன் போடைஸ் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (08) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்பட்டனர்.
புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தராசு நிறுவையை நிறுவையை ஒழுங்காக காட்டுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அத்தொழிலாளர்கள் போடைஸ் தோட்ட காரியாலயத்தின் முன்பாக இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும் தமது அடிப்படை வசதிகள் குறித்த தோட்ட நிர்வாகம் கடந்த 2 வருடங்களாக அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், இதனால் தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ள குறித்த தோட்டத்தின் 3 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3000 தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வருவதாகவும் எமது நிருபர் தெரிவித்தார்.
தொழிலார்களுடைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட தொழிலாளர் தேசிய சங்க உப தலைவரும், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவருமான எம்.நகுலேஷ்வரன், சங்கத்தின் பொது செயலாளர் பிலிப் மற்றும் இலங்கை தொழிலாளர் சங்கத்தின் உப தலைவரும், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான கு.ராஜேந்திரன் ஆகியோர் முயன்று வருவதாகவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம்