இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைப்பது தொடர்பான புதிய அறிவிப்பு

தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்களை இழந்து தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அந்த நாடுகளின் சட்டத்தின் கீழ் புதிய தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராயுமாறு தூதரகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புதிய முகவர்களினூடாக அது தொடர்பில் ஆராயுமாறு கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்களை இழந்து 20இ000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய கூறியுள்ளார்.

மூலம் : Newsfirst.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435