இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் (03) தனத வீட்டில் உயிரிழந்ததுடன் பிரேத பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவரென இன்றைய நேற்றையதினம் (04) அடையாளம்காணப்பட்டுள்ளது.
இந்தப் பெண் ஒரு மாதத்திற்கு மேலான காலம் தனது வீட்டில் நோய் நிலையில் இருந்ததாகவும் நாள்பட்ட நோய்களினால் அவதிப்பட்டதாகவும் பிரேத பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது.
இந்த நோயாளி உயிரிழப்பதற்கு காரணம் என்ற ரீதியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையினால் ஏற்பட்ட இருதய நோய் நிலைமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் இடம்பெற்ற 24ஆவது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவரின் மரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
மேலும் இ கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் வீட்டில் விழுந்த சம்பவத்தில் தலையில் ஏற்பட்ட பாரிய பாதிப்புடன் 02 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு இதன் காரணமாக நேற்று முன்தினம் (03) தினம் மரணமாகியுள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருப்பினும் உயிரிழப்பிற்கான தாக்கத்தை ஏற்படுத்திய விடயத்திற்கு அமைவாக இந்த மரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் ஏற்பட்ட மரணமாக கருதப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ReplyForward
|