கொவிட் 19 தொற்று சமூக பரவலை எட்டியுள்ளது – பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் சில இடங்களில் கொவிட் 19 தொற்று சமூகப்பரவலாக நிலையை எட்டியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 சமூகப் பரவல் ஏற்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக அறிக்கை வௌியிட்டு வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தேசிய ஆங்கில நாளிதழான டெய்லி மிரருக்கு வழங்கி செவ்வியொன்றிலேயே பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம். பாலசூரிய இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மோதர, மட்டக்குளிய, ப்ளூமெண்டல், கிராண்பாஸ் மற்றும் பொரல்ல ஆகிய பகுதிகளில் ஆங்காங்ககே கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த கொத்தணியுடனும் தொடர்பற்றவர்கள்.

எந்த கொத்தணியுடன் தொடர்பில்லாம் ஆங்காங்கே தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுவது சமூப்பரவலாகும். அவ்வாறான தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்த போதிலும் களத்தில் இருந்து பணியாற்றுபவர்கள் என்ற நிலையில் நாம் அதனை அடையாளங்கண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

அவ்வாறான நிலை குருணாகலை மாவட்டத்திலும் காணப்படுகிறது. இந்நிலை அனைத்து மாவட்டங்களிலும் உள்ளமையினால் பொதுகமக்களும் அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பாலசூரிய உரிய அதிகாரிகளுக்கு நிலைமை தொடர்பில் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பு செயற்பாடுகள் போதுமானது என்றபோதிலும் தொடர்ச்சியாக, சரியான முறையில் கண்காணிக்கப்படவேண்டும். ப்ளூமெண்டல் போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து மக்கள் வௌியில் நடமாடுகிறார்களா என்பது குறித்து சரியான முறையில் கண்காணிக்கப்படுவதில்லை

எனவே, நிலைமையை கவனமாக கண்காணித்து, அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைப் அவதானிப்பது அவசியம் என்றும் பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மூலம்- டெய்லி மிரர்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435