இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் காலவரையறை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் இலங்கை அராசங்கத்திடம் வினவியுள்ளனர்.
கொழும்பைத் தளமாகக் கொண்ட இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கடநடத புதன்கிழமை (18) அமைச்சில் சந்தித்தார்.
இதன்போது அவர்கள் குறித்த விடயத்தை வினவியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றிலான ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலமாக இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது விருப்பத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2.3 பில்லியன் யூரோ பெறுமதியான ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருவதாகவும்இ 6,000 க்கும் மேற்பட்ட ஏற்றுமதித் தயாரிப்பு வகைகளுக்கான கட்டணமில்லாத அணுகலை அனுமதிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி 10 சலுகையிலிருந்து தொடர்ந்தும் பயனடைந்து வருவதாகவும் தூதுவர்கள் எடுத்துரைத்தனர்.
இது சம்பந்தமாக, அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் காலவரையறை ஆகியன குறித்து தூதுவர்கள் விளக்கங்களைக் கோரியுள்ளனர.
இந்த நிலையில், கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படுத்தப்பட்டுள்ள பணம் மற்றும் சுற்றுலா வருமானங்களிலான கணிசமான குறைப்பின் காரணமாக, பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு நாணய இருப்பு ஆகியவற்றில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.
தங்களது நகர்வின் பாகமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.