கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தில் தபால் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தின் தபால் அதிகாரியின் அலுவலகம் மற்றும் குருநாகல் பிரதான தபால் காரியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றும் 14 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் தபால் அதிகாரி காரியாலயத்தில் அண்மையில் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் குறித்த 14 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.