பெண் ஊழியரை காரியாலயத்தில் தாக்கிய பொறியியலாளர் கைது

மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடுகம்பொல அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் தலைமை பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (25) முற்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அலுவலக பெண் ஊழியர் ஒருவரை அவர் தாக்க காணொளி சமூக வலைத்தளங்களில் நேற்று (24) வைரலாக பரவியது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை பொறியியலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாக மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, குறித்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் பெண்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லங்ஷா, குறித்த தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435