எத்தியோப்பியாவின் வட பகுதியில் உள்ள டைக்ரே பிரதேசத்தில் யுத்த வலயத்தில் சிக்கியிருந்த 38 இலங்கையர்ளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவில் ஐக்கிய நாடுகுள் அமைப்புடன் வெளிவிவகார அமைச்சு நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக, அங்குள்ள இலங்கை தூதரகம் குறித்த இலங்கையர்களை யுத்த வலயத்தில் இருந்து மீட்டுள்ளது.
இலங்கையர்கள் உட்பட மேலும் சில நாடுகளை சேர்ந்தவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு வாகனங்களில் டைக்ரே பகுதியில் இருந்து அபார் பகுதிக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
எத்தியோப்பியாவில் ஆடைத் தொழிலில் பணிபுரியும் இலங்கை நாட்டினர் அனைவரும் விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியை (TPLF) சேர்ந்த பிராந்தியப் படைகள் ஒரு கூட்டாட்சி இராணுவத் தளத்தைத் தாக்கியதை அடுத்து, எத்தியோப்பியா அரசு 2020 நவம்பர் 04 அன்று டைக்ரே பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.