பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் வன்முறைகளற்ற பணியிடம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஹட்டனில் அண்மையில் நடைபெற்றது.
ப்ரொடெக்ட் தொழிற்சங்கமானது சொலிடாரிட்டி சென்ரர் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் உலக தொழிலாளர் சமவாயத்தின் C190 பிரகடனத்தை இலங்கைக்குள் நிறைவேற்றுகின்றமையை சாத்தியமாவதற்கு செய்யவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஹட்டன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் முறைசாரா துறையைச் சார்ந்த பெண்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அன்றாட பணியில் முகங்கொடுக்கும் உடல் உள ரீதியான பிரச்சினைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த அனுபவங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டதுடன் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு தாம் ஒன்றிணைவது எந்தளவுக்கு முக்கியம் என்றும் கவனம் செலுத்தப்பட்டது.