அரசாங்கத்தினால் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை CTA தோல்வியடையச் செய்வதற்காக அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்திற்கு ஜனநாயகம் குறித்து பெருமை பாராட்டும் அரசாங்கம், தமக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவே இவ்வாறானதொரு சட்டமூலத்தை கொண்டுவரகின்றது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகிளின் தலைவர்களிடம் இது குறித்து தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.