UAEயில் எரிபொருள் விலை குறைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிபொருள் விலை அடுத்த மாதம் தொடக்கம் குறைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு சக்தி மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் 98 பெற்றோலின் (Super 98) 2.37 திர்ஹமில் இருந்து 2.28 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் 95 (Special 95) பெற்றோலின் விலை 2.26 திர்ஹமில் இருந்து 2.16 திர்ஹமாக இம்மாதம் குறைக்கப்பட்டது. அதேபோல் ஒரு லீ்ற்றர் இ- பள்ஸ் (E-Plus 91) பெற்றோலின் விலை 2.18 திர்ஹமில் இருந்து 2.08 திர்ஹமாக அடுத்த மாதம் குறைக்கப்படவுள்ளது. அதேபோல், 2.42 திர்ஹமாக இருந்த டீசலின் விலை 2.38 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியுடன் மேற்கூறப்பட்ட விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435