நாட்டில் 6 பேருக்கு நேற்று (25) கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு நேற்றிரவு இறுதியாக கொவிட்-19 தொற்று உறுதியானது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சென்னையில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கும், பெலருஸில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியானது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 9 பேர் நேற்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் 656 தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு 10.45 மணிக்கு வெளியிட்ட கொவிட்-19 நிலவர அறிக்கை கீழே…