அரச ஊழியர்கள் தேர்தல் கடமையை புறக்கணித்தால் எடுக்கப்படும் நடவடிக்கை

அரச ஊழியர்கள் தேர்தல் கடமையை புறக்கணிப்பது தாபன விதிக்கோவையில் தண்டனைக்குரிய குற்றமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அரச ஊழியர் ஒருவர் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கான தேர்தல் கடமைக்கான கடிதம் கிடைக்காவிட்டால், அவர் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள தேர்தல் காரியாலயத்திற்கு சென்று கட்டாயமாக வினவ வேண்டும்.

இது நியதியாக்கப்படவில்லை என பெரும்பாலானோர் நினைக்கலாம். ஆனால் இதனுடன் தொடர்புபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். எனினும் அவ்வாறானவர்களில் சிலரின் பதவி உயர்வின்போது குறிப்பாக சிரேஷ்டதுவமிக்கவர்களின் பதவி உயர்வின்போது அதில் தாக்கம் செலுத்தும் வகையிலான குறிப்புகள் அதில் உள்ளடக்கப்பட்டன.

ஆனால், இந்த முறை தேர்தல் கடமையை புறக்கணிப்பது தாபன விதிக்கோவையில் தண்டனைக்குரிய குற்றமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் அருந்தும் சிறிய குழந்தைகள் உள்ளவர்கள், உடல்ரீதியான பாதிப்பு உடையவர்கள் ஆகியோர் இதில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அனைவரையும் அவ்வாறு விடுவிக்க முடியாது.

நாம் எப்போதும் கூறுவது போன்று எமது வாக்களிப்பு நிலையம் கொரோனா தாக்கமற்றது என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435