அரச நிருவாக சேவை அதிகாரிகள் இன்று (14) கட்டாய சுகயீன விடுப்பில் உள்ளனர். தமது கடமைகளில் இருந்து விலகும் நோக்கில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அரச நிருவாக சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக சங்கத்தின் செயலாளர் ரோஹன டி சில்வா தெரிவித்தார்.
குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் கொடுப்பனவு வழங்குவதில் மேலும் தாமதமேற்படும் என்றும் சங்கச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிருவாக சேவை அதிகாரிகள் 2462 பேர் இன்று சுகயீன விடுப்பு பெற்று கடமை பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளனர் என்று நிருவாக சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.