இன்று (27) வெளிநாடுகளில் இருந்து பெருமளவானோர் நாடுதிரும்பியுள்ளனர்.
தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 50 பயணிகளும், துபாயிலிருந்து UL 226 விமானம் ஊடாக 52 பயணிகளும் , அவுஸ்திரேலியாவிலிருந்து UL 607 விமானம் ஊடாக 191 பயணிகளும் , ஜபானிலிருந்து UL 455 விமானம் ஊடாக 12 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர்.
அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.