இன்று (28) காலை தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 44 பயணிகளும், இந்தியாவிலிருந்து UL 1026 விமானம் ஊடாக 53 பயணிகளும் இலங்கை வருகை வந்துள்ளதாக கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.